Advertisement

புதிய காஷ்மீர்; மோடி உறுதி

7 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து பேசவுள்ள 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சிக்காக ஹூஸ்டன் நகருக்கு சென்ற மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகள் பிரதமரைச் சந்தித்தனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு முழு ஆதரவு அளிப்பதாக பண்டிட்டுகள் கூறினர். அப்போது, மோடியின் கையை ஒருவர் முத்தமிட்டார். ''7 லட்சம் பண்டிட்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்'' என அவர் உருக்கத்துடன் கூறினார். அதற்கு மோடி, ''உங்களுக்காகவும் ஒவ்வொரு இந்தியருக்காகவும் புதிய காஷ்மீரை உருவாக்குவேன் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement