Advertisement

ஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி

தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், மாணவர்கள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் 4 கோடி மரங்கள் நட்டு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோபியை அடுத்த காசிபாளையத்தில் தமிழமுது தொண்டு நிறுவனம் சார்பில், 2,555 பனை விதைகள் குளக்கரை மற்றும் சாலையோரங்களில் நடப்பட்டது. கோபி பசுமை காக்கும் கரங்கள் சார்பில் வேட்டைகாரன்கோவில், கெட்டிச்செவியூர், செட்டிபாளையம் பகுதிகளில் 6,500 பனை விதைகள் நடப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement