Advertisement

குப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்!

கோவையில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க, மாநகராட்சி சார்பில், குப்பை கொட்டும் பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, சாணம் மெழுகி, பூக்கோலமிட்டு, சுவாமி படம் வைத்து அலங்கரித்து வருகின்றனர். தொட்டி வைத்திருந்தாலும் கூட, திறந்தவெளியில் பொதுமக்கள்ஆங்காங்கே குப்பையை வீசிச் செல்கின்றனர். மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட வேண்டும், தரம் பிரித்து குப்பை வழங்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குப்பை இல்லா வார்டு உருவாக வேண்டுமானால் தொட்டிகள் இருக்க கூடாது; அதனால், படிப்படியாக தொட்டிகளை அகற்றிவிட்டு, குப்பைகளை வீடுகளிலேயே தரம்பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement