Advertisement

புதுச்சேரியில் பேனருக்குத் தடை

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சுபஸ்ரீ என்ற பொறியாளர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவர் மீது பேனர் விழுந்தது. இதையடுத்து நிலை தடுமாறிய நிலையில் அவர் மீது தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சோக சம்பவத்தின் காரணமாக, யாரும் பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும், பேனர்கள் வைக்கக்கூடாது என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். இதன் எதிரொலியாக புதுச்சேரி உள்ளாட்சி துறை அலுவலகத்தில், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement