Advertisement

இந்தி விவகாரம் அமித்ஷா விளக்கம்

இந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தி மொழியால்தான், நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமித்ஷா, எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பிற மொழி ஒன்றை கற்க வேண்டுமானால், இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன் என தெரிவித்துள்ளார். பொதுமொழி தேவை என்பதால், இந்தியை 2வது மொழியாக கற்கச் சொன்னேன் என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement