Advertisement

பாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 747 பேருக்கு 3 கோடியே 1௦ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சண்முகம் வழங்கினார். அப்போது அரசு அலுவலர்கள் பட்டா மற்றும் உதவி தொகை ஆணையை பயனாளிகளுக்கு மாற்றி கொடுத்ததால் மேடையில் குழப்பம் ஏற்பட்டது. இதனை கவனித்த அமைச்சர் சண்முகம் அரசு அலுவலர்களை அதனைச் சரி பார்த்து அனுப்ப சொன்னார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதால் கோபம் அடைந்த அமைச்சர், அரசு அலுவலர்களிடம், நீங்களே அனைத்தையும் கொடுத்து விடுங்கள் என கூறி, நலத்திட்ட ஆணைகளைப் பயனாளிகளுக்கு அளிக்காமல் பாதியில் நிறுத்தினார். இதனால் கூட்டம் பாதியில் நின்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement