Advertisement

500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை அருகே உள்ளது நெடுமருதூர் கிராமம். இந்தக் கிராமத்தில் கழனிவாசல் வாய்க்கால், வாடாக்குடி வாய்க்கால், மாங்குடி வாய்க்கால் ஆகிய 3 பாசன வாய்க்கால்கள் உள்ளன. சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடிக்கான கைநடவு மற்றும் பாய் நாற்றங்கால் நடவு செய்யப்பட்டிருந்தது. அவை தற்போது முளையிட்டு வளரத் தொடங்கியுள்ள நிலையில், நெடுமருதூர் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததாலும் இரண்டு நாட்களாக இரவில் பெய்த கனமழையாலும் வாய்கால்களில் செல்லும் தண்ணீர் விளைநிலங்களில் புகுந்தது. இதனால் நடவு செய்யப்பட்ட 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement