Advertisement

கல்லூரிகளுக்கான செஸ் போட்டி

கோவை, சரவணம்பட்டி பி.பி.ஜி.,டெக்., கல்லூரி சார்பில் 11வது மண்டல அனைத்து கல்லூரிகளுக்கான போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 12 கல்லுாரிகளை சேர்ந்த 200 பேர் 4 சுற்று போட்டியில் பங்கேற்று தங்களது ராஜதந்திரங்களை வெளிப்படுத்தினர். இதே போல், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கட்பட்ட கல்லூரிகளுக்கான செஸ் போட்டி காரமடையில் நடந்தது. ஆர் வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சுகுணா போட்டியை தொடங்கி வைத்தார். கோவை, ஈரோடு, திருப்பூரில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் 320க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். குழு மற்றும் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் தென் மண்டல செஸ் போட்டிக்கு தகுதி பெறுவர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement