Advertisement

தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகள்

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். மாவட்டத்தைப் பொறுத்த வரை 80 சதவீத விவசாயிகள் ஆற்றுப் பாசனத்தை நம்பியே விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக 15 தினங்களுக்கு முன் தண்ணீர் திறந்தும் இதுவரை கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆறுகளுக்குத் தண்ணீர் வரவில்லை. இதனால் நீண்ட கால பயிர்களைச் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆடி மாதத்தில் மழை பெய்தவுடன் தங்கள் விளை நிலத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை தேர்வு செய்து நேரடி தெளிப்பு செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கோடை உழவு செய்து கொள்ள போதுமான மழை பெய்யவில்லை. அதனால், கோடை உழவு செய்யப்படவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement