Advertisement

ஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி

எம்.சி.சி முருகப்பா குழுமம் நடத்தும் சென்னை பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டிகள் எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சனியன்று நடந்து முடிந்தது. சென்னையில் இருந்து 12 அணிகள் தேர்வு செய்யபட்டு போட்டிகள் நடத்தபட்டன. இதில் வேப்பேரி செயின்ட் பால்ஸ் உயர்நிலைபள்ளியும் கே.கே.நகர் பத்ம சேசாத்ரி பள்ளியும் மோதின. ஆட்ட நேர இறுதிவரை பத்ம சேசாத்ரி பள்ளியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், ஆட்டம் 4-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் செயின்ட் பால்ஸ் உயர்நிலைபள்ளி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த தொடரின் சிறந்த பார்வர்ட் வீரராக செயின்ட் பால்ஸ் பள்ளியை சேர்ந்த தீபக்-கிற்கும், தொடரின் சிறந்த வீரராக அஞ்சுமன் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த அமீர் தேர்வு செய்யபட்டனா்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement