dinamalar telegram
Advertisement

789 கி.மீ., தூர்வாரும் பணி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து கடந்த வாரம் காவிரி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிவரை சென்றடையும் வகையில் ஆற்றில் குடிமராமத்து பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சையை அடுத்த வெண்ணலோடை கிராமத்தில் வெண்ணாற்றில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆற்றின் நடுவில் உள்ள மண்மேடு திட்டுக்கள் மற்றும் நாணல், காட்டாமணக்கு முட்புதர்களை அகற்றும் பணி பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியினை கலெக்டர் அண்ணாதுரை, பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் சுமார் 3 கிமீ ஆற்று தண்ணீர் மற்றும் சேற்றில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement