Advertisement

அவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை

வேலூர், பேரணாம்பட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் . ஆனால் மருத்துவமனை தூய்மையற்ற நிலையில், நோயாளிகளிடம் பணம் பெற்று கொண்டு தான் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக இருதய நோயைக் கண்டறியும் ஈசி ஜி மிஷினும் சரியாக இயங்கவில்லைஎன்றும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்ற குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவிலும் முறையாக மருத்துவர்கள் பணிக்கு வருவதும் கிடையாது. இதனால் 20 கிலோமீட்டர் தூரம் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement