Advertisement

8 மாதத்தில் பழுதடைந்த அடுக்குமாடி வீடுகள்

கோவைப்புதூர் அடுத்த அறிவொளிநகரில் குடிசை மாற்று வாரியம் சார்பில், 960 அடுக்குமாடி வீடுகள் 8 மாதங்களுக்கு முன் கட்டப்பட்டன. இந்த வீடுகள் தரமில்லாததால், தற்போது பெய்த மழையில் கூறைகள் பழுதடைந்துள்ளதாக குடியிருப்பவர்கள் கூறுகின்றனர். மொட்டைமாடியில் முறையாக தளம் அமைக்காததால் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் கசிகின்றன. மழைநீரில் சுவர்கள் ஊறி பலமிழந்து காணப்படுகின்றன. ஈரசுவற்றில் மின்சாரம் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, பழுதடைந்த வீடுகளை சரிசெய்துதரவேண்டும் என குடியிருப்பவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement