Advertisement

வேலூரில் வெளுத்து வாங்குது மழை

வேலூர் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அரக்கோணம் நகர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அடியில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்ததுள்ளது. ஆம்பூர் காய் மற்றும் பூ மார்க்கெட்டுகளில் மழையின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. ஆம்பூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதற்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் மற்றொரு சாலையான பெங்களூர் - சென்னை இருமார்க்க சாலைகளிலும் கொட்டும் மழையிலும் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் அருகேயுள்ள சுற்றுலா இடமான ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஜலகம்பாறை கிராம மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அதிகமான வெள்ளம் காரணமாக சுற்றுலாப்பயணிகள் நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement