Advertisement

கல்லணையில் தண்ணீர் திறப்பு

மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர கல்லணையை வந்தடைந்தது, இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை,நாகை,திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்குக் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளுக்கு தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் அமைச்சர்கள் காமராஜ், வளர்மதி, நடராஜன், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் ஆகியோர் காவிரி ஆற்று மதகு பொத்தானை அழுத்தி திறந்து வைத்தனர். கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடியும், வெண்ணாற்றில் 1000 கனஅடியும், கல்லணை கால்வாயில் 500 கனஅடியும், கொள்ளிடத்தில் 1000 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி பாசன பகுதிகளில் தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்த பின் உரியநீர் காரைக்கால் பாசன பகுதிக்கு பங்கீடு செய்யப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement