Advertisement

மணமகனுடன் சென்ற மணப்பெண் சாவில் மர்மம்

மயிலாடுதுறை அருகே பரசலூர், ஓளவையார் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா. தனியார் பள்ளியில் ஆசிரியை. இவருக்கும், நன்னிலத்தைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் செப்.16-ஆம் தேதி திருமணம் செய்வதாக, கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருச்சி சிறப்பு காவல்படையில் காவலராக உள்ள ராஜ்குமார் நிச்சயதார்த்திற்குப்பின் சித்ராவை பலமுறை வெளியில் கூட்டிச்சென்று வந்துள்ளார். இந்நிலையில், வியாழனன்று இரவு சித்ராவை திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், மறுநாள் மதியம் பரசலூருக்கு ஆம்புலன்சோடு வந்த ராஜ்குமார், திருச்சியில், சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறி, சித்ராவின் உடலை வீட்டில் இறங்கி வைத்துள்ளார். சித்ராவின் சாவில் மர்மம் இருப்பதாக கிராம மக்கள் போலீசாரில் புகார் தெரிவித்ததால் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் நடந்தது திருச்சியில் என்பதால் சித்ராவின் இறப்பு குறித்து திருச்சி கன்டோன்மெண்ட்டுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement