Advertisement

‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஸ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் வெளியான ஹிந்தி படம் அந்தாதூன். மூன்று தேசிய விருதுகளை வென்ற இப்படம் சில வெளிநாட்டு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில், இப்படம் தமிழில் தயாராகிறது. பிரஷாந்த் நாயகனாக நடிக்க, அவரது அப்பா தியாகராஜன் ஹிந்தி உரிமையை வாங்கி தயாரிக்கிறார். தியாகராஜன் கூறுகையில், 'அந்தாதூன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக இருக்கும். இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெறுகிறது என்றார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement