Advertisement

நீலகிரியில் தண்ணீர் ஏ.டி.எம்.,: 1 லிட்டர் 5 ரூபாய்

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 முதல் குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது. சுற்றுலாப்பயணிகள் அதிகளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களை வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வீசிசெல்வதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவர்களின் வசதிக்காக, பர்லியார், குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி சாலைகளிலும் முக்கிய சுற்றுலாத்தளங்களிலும் தண்ணீர் ஏ.டி.எம்.,கள் பொருத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 70 மிஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 5 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் பெற்றுக்கொள்ள முடியும். விரைவில் இந்த ஏ.டி.எம்.,கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement