Advertisement

'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் 'சர்க்கார்'. கதை திருட்டில் சிக்கிய இப்படத்திற்கு தீர்வாக சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் அந்த கதைக்கு சொந்தமான வருண் ராஜேந்திரன் பெயரை பதிவிட்டு கவுரவம் தந்தனர். இதேப்போன்று இந்தாண்டு ஜெயம் ரவி நடித்துள்ள ‛கோமாளி' படமும் கதையும் திருட்டு பஞ்சாயத்து வந்தது. பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் 'கோமாளி' பட கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதன் பஞ்சாயத்து தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. 'கோமாளி' படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கவுரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம். ஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement