Advertisement

வெள்ளியங்கிரியில் வீடுகள் கட்ட கோர்ட் தடை

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 4 ஆயிரத்து 710 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வனவிலங்குகள் அபாயம் உள்ள அந்த பகுதியில், உரிய அனுமதிகள் பெறாமல் குடியிருப்புகள் கட்டப்படுவதாக, வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வனத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், யானைகள் நடமாட்டம் அதிகம் இப்பகுதியில், உயிர் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியாது என்ற நிபந்தனையுடன் வீடுகள் கட்ட தடையில்லா சான்று வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி வீடுகள் கட்டப்படுவதாகவும், ஏற்கனவே, மலையடிவாரத்தில், விதி மீறி கட்டப்பட்டதாக கூறி மூடப்பட்ட கல்லூரிக்கு அருகேதான் தற்போது வீடுகள் கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளிக்காத வரை, வீடு கட்டும் பணியை தொடரக்கூடாது என குடிசை மாற்று வாரியத்திற்கு உத்தரவிட்டனர். .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement