Advertisement

தாய் தற்கொலை: அனாதையான பிஞ்சுகள்

திருச்சி சிறுகனூரைச் சேர்ந்த முத்துச்செல்வன், பிரியா தம்பதியினர், ஏழாண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏழு, ஐந்து மற்றும் மூன்று வயதில் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன், சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்கு திருமாநகர் கிராம மக்கள் சார்பில், டிராக்டர் மூலம் பூக்களை கொண்டு சென்ற போது, அரசு பேருந்து மோதிய விபத்தில், முத்துச்செல்வன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 22 வயதில் கணவரை இழந்த ப்ரியா, தனது மூன்று குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மாமியார், மாமனார் வெளியே சென்றிருந்த நேரத்தில், மூன்று குழந்தைகளையும் வீட்டில் விட்டுச் சென்ற ப்ரியா, கணவன் உடலை புதைத்த திருமாநகர் சுடுகாட்டிற்கு சென்றார். அங்கு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து உயிரிழந்தார். தகவலறிந்த சிறுகனூர் போலீசார், ப்ரியாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து தாய், தந்தையரை இழந்த மூன்று பிஞ்சுகளும் ஒன்றும் அறியாமல் கதறி அழுதது அப்பகுதியினரை வேதனையில் ஆழ்த்தியது. மூன்று குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி, மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். பேட்டி : அன்னக்கொடி
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement