Advertisement

வெள்ளை அறிக்கை வேண்டும்

தஞ்சாவூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், பேட்டியளித்த அவர், மேட்டூர் அணை திறப்பு நல்ல செயல் என்றும் சென்ற ஆண்டு முக்கொம்பில் ஏற்பட்ட உடைப்பினால் 140 டிஎம்சி தண்ணீர் வீணானது, அதே நிலை இந்தாண்டும் ஏற்படக்கூடிய மோசமான நிலைமை இருக்கிறது என்றும் கூறினார். தண்ணீர் திறக்கக் கூடிய காலங்களில் வேண்டுமென்றே திட்டமிட்டு பணிகளைத் தொடங்கி தண்ணீர் திறந்த பிறகு பணிகள் முடிந்து விட்டது என்று பகல் கொள்ளை ஆண்டுதோறும் நடைபெறுகிறது. நடைபெற்ற வேலைகள், முடிந்த வேலைகள் குறித்து பொதுப்பணித்துறையை வைத்திருக்கும் முதல்வர் வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement