Advertisement

கலெக்டர் மன்னிப்பு கேட்கணும்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் தரிசனத்தின் போது, விஐபிக்கள் செல்லும் வழியில் பொதுமக்களை அனுமதித்தாக கூறி, போலீஸ் இன்பெக்டர் ஒருவரை மாவட்ட கலெக்டர் பொன்னையா, பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில் வசைபாடி, சஸ்பென்ட் செய்ய வைத்தர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், கலெக்டரின் நடவடிக்கை சரி என்றும் தவறு என்றும் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், காஞ்சி கலெக்டரின் செயல் தரக்குறைவானது, மனிதாபிமானமற்றது என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட காவலர் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், காவல்துறைக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதால், கலெக்டர் பொன்னையா, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement