Advertisement

காவிரி வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிறைந்துள்ளன. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒகேனக்கல் - அஞ்செட்டி சாலையில் வெள்ளநீர் சூழ்ந்ததால், 2வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், சுற்றுலாப் பயணிகள் செல்லவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, வினாடிக்கு, 32 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளதால், காவிரியிலும் வெள்ளப்பெருக்கு குறைய வாய்ப்புள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement