Advertisement

‛நம்ம வீட்டுப் பிள்ளை' சிவகார்த்திகேயன்

‛மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா' படங்களை தொடர்ந்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், சூரி, நட்ராஜ் நடிக்கின்றனர். இமான் இசை. எம்ஜிஆரின் ‛எங்க வீட்டுப் பிள்ளை' தலைப்பை இப்படத்திற்க வைக்க திட்டமிட்டனர். இதன் உரிமையை வைத்துள்ள விஜயா புரொடக்ஷன் சம்மதிக்கவில்லை. இதனால், படத்திற்கு ‛நம்ம வீட்டுப்பிள்ளை' என தலைப்பு வைத்து, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கிராமத்து கதையில் உருவாகும் ‛நம்ம வீட்டுப்பிள்ளை' போஸ்டரில் செப்டம்பரில் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால் படம் செப்டம்பரில் வெளியாகும் என தெரிகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement