Advertisement

முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பாத்ரா மாவட்டம், உபா கிராமத்தில் Ubha village 36 ஏக்கர் விவசாய நிலத்தை பஞ்சாயத்து தலைவர் யக்யா தத் Yagya Dutt வாங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடி மக்களை பஞ்சாயத்து தலைவரின் ஆட்கள் சரமாரி சுட்டதில் 10 பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வெள்ளியன்று பிரியங்கா சென்றார். முதல்வர் யோகி தடை போட்டார். பிரச்னை தீவிரமாகும் என்று சொன்னார். பிரியங்காவை மிர்சாபூர் விருந்தினர் மாளிகையில் போலீசார் தடுப்புக் காவலில் வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காமல் திரும்ப மாட்டேன் என்று சொல்லி பிரியங்கா விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார். சனி காலை உயிரிழந்தோரின் குடும்பத்தினர் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா, 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்'' என்றார். ''10 பேர் கொலைக்கு யோகி அரசுதான் பொறுப்பு; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன்; மீண்டும் சோன்பாத்ராவுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு டில்லி புறப்பட்டார் பிரியங்கா.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement