வரதராஜ புரம் டி.என்.ஜி.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப்,
முன்னாள் மாணவர் சங்கம் சார்பில்
25வது ஆண்டு டி.என்.ஜி.ஆர்.,நினைவு கோப்பை
மாவட்ட விளையாட்டு போட்டிகள்,
பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
கபடி, கோ-கோ, வாலிபால், கூடைப்பந்து, பூப்பந்து
போட்டிகள் நடக்கிறது. 47 பள்ளிகள் பங்கேற்றுள்ளன.
14 வயது மாணவர் கபடி போட்டியில்
சபர்பன் பள்ளி 23-22 புள்ளிக்கணக்கில்
ரத்னபுரி மாநகராட்சி பள்ளியை வென்றது.
கோ-கோ போட்டியில், ராமகிருஷ்ணா பள்ளி,
9-1 புள்ளிக்கணக்கில் மல்லையன் பள்ளியை வென்றது.