கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை
பூவனநாத சுவாமி கோயிலில்
மாங்கனி வரவழைத்தல் விழா நடைபெற்றது.
முன்னதாக காரைக்கால் அம்மையாருக்கு
மாங்கனிகளுடன் மா, மஞ்சள், இளநீர், பால், தயிர்,
சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால்
அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
விழா ஏற்பாடுகளை அப்பர் கண்ணுச்சாமி சிவா
தொண்டர்கள் குழுவினர் செய்திருந்தனர்.