யார் என்ன சொன்னாலும் சரி,
உள்ளாட்சி தேர்தலை நடத்தவே கூடாது..
என்ற முடிவில் எடப்பாடி அரசு
தனது உறுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் 2016 ம் ஆண்டில்
உள்ளாட்சி தேர்தல் நடந்திருக்க வேண்டும்.
அந்த ஆண்டு சட்டசபை தேர்தலில்
மீண்டும் ஆட்சியை பிடித்த அதிமுக,
உள்ளாட்சி தேர்தலில்
எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு
இருப்பதாக தெரிந்ததால்
தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டது.