ஒருநாள் கிரிக்கெட்டில்
உலக கோப்பையை ஜெயித்தும்
அந்த வெற்றியை கொண்டாட முடியாமல்
கண்ணீர் விடுகிறது இங்கிலாந்து.
இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்த முடியாமல்
அடுத்து வந்த சூப்பர் ஓவரிலும் சறுக்கியது இங்கிலாந்து.
இதனால், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில்
உலக கோப்பை இங்கிலாந்துக்கு கிடைத்தது.
ஐ சி சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்
இந்த முடிவு உலகம் முழுவதும் கேலி செய்யப்படுகிறது.
இங்கிலாந்திலேயே பலர் இந்த முடிவை ஏற்கவில்லை.