மாணவர்களிடையே ஒழுக்கம், நேர்மையை வளர்க்க
வித்தியாசமான முயற்சியை கையாள்கிறது
கோவை, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி.
இங்குள்ள ஒரு வகுப்பறையில் 'நேர்மை அங்காடி' அமைக்கப்பட்டுள்ளது.
இதுவும் ஒரு கடை மாதிரிதான். மாணவ, மாணவிகளுக்கு தேவையான
பேப்பர், பேனா, நோட் புக், பென்சில், சார்ட், வரைபடங்கள் உள்ளிட்ட
எழுது பொருட்களும், கடலை மற்றும் எள் மிட்டாய்களும்
விலை பட்டியலுடன் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அங்காடியை கவனிக்க ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு,
அதற்கான பணத்தை அங்கிருக்கும் உண்டியலில் போட்டு விட வேண்டும்.