Advertisement

தொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கிராமங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு தொண்டை அடைப்பான் எனும் நோய் பரவி வருகிறது. இந்த நோய் தாக்கத்தால் மல்லியம்மன்துர்க்கம் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் காசி பிரசாத், கோவை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தான். அதே கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கவிப்பிரியா, தொண்டை அடைப்பான் நோய் தாக்கத்தால் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த கிராமத்தில் முகாமிட்ட சுகாதாரத்துறையினர் நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஆறு குழுக்களாக பிரிந்து இதுவரை 1,200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். இதுபோன்ற நோய்கள் பராமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement