ஊட்டியை அடுத்த பார்சன்ஸ்வேலி மேல்கோடு மந்தில்
புலி ஒன்று இறந்து கிடந்தது. வனத்துறையினர் செய்த ஆய்வில்,
14 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரிந்தது.
இங்கு சில இடங்களில் விவசாயம் நிலம் இருப்பதால்,
வனவிலங்கு மோதலில் புலி இறந்ததா அல்லது
விவசாய நிலத்தை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க
விஷம் வைத்து கொல்லப்பட்டதா என
பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என
வனத்துறையினர் தெரிவித்தனர்.