Advertisement

காஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி

கரூரை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ரக்ஷனா, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 8 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 4 லட்சம் விதைப்பந்துகளை தூவி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். 30 நாட்கள் பயணத்தின் நிறைவு விழா கரூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. விதைப்பந்துகளை தூவி பசுமைக்கு வித்திட்ட ரக்ஷனாவை அனைவரும் பாராட்டினர். பயணத்தின் போது, பெண் கல்வி ஊக்குவித்தல், பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், பறவை இனம் காத்தல், இயற்கை விவசாயம் மேம்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement