வேலூர், ஆம்பூர் அடுத்த பைர பள்ளி,
ஊட்டல் மலைப்பகுதிகளில்
கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால்,
காப்புக் காடுகளில் இருந்து
காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த சில மாதங்களாக
பருவ மழை பொழியாமல் வெப்பம் தணித்து வந்த நிலையில்
தற்போது மழை பொழிந்து வருவதால்
விவசாய நிலங்களில் சாகுபடி பயிரான
வேர்க்கடலை பயிர் செய்ய ஏதுவாக அமைந்துள்ளது.
மேலும் மிட்டாளம், குட்டகந்தூர், வன்னிநாதபுரம்
பந்தேரிப்பள்ளி, பாட்டூர் உள்ளிட்ட
10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.