Advertisement

மழைவேண்டி மண்ணுக்கடியில் தவபூஜை

தருமபுரி, தீர்த்தமலை அருகே உள்ள பொய்யப்பட்டி கிராமத்தில் மணி என்பவர், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வனதுர்க்கை அம்மன் கோயிலில் தவம் செய்தார். 10 அடி ஆழத்திற்கு குழித்தோண்டி அதில் அவர் அமர்ந்து கொள்ள, குழியின் மீது பலகை மற்றும் மண் போட்டு மூடப்பட்டது. பூமிக்கடியில் பஞ்சபூத வர்ணபூஜை, தவ பூஜைசெய்த அவர், இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்து வனதுர்க்கை அம்மனுக்கு பூஜை செய்தார். 8,500 ஆண்டுகளுக்கு முன்பு, கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது, சித்தர்கள் செய்த, இந்த பஞ்சபூத வர்ண பூஜையை செய்ய 13 ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும், இரு தினங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் மணி கூறினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement