Advertisement

மாநில அரசுக்கே முழு அதிகாரம் உச்சநீதிமன்றம் அதிரடி

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் துவக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ததெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் முழு அதிகாரம் உள்ளது என முதல்வர் நாராயணசாமியும் யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்குத் தான் அதிகாரம் என கவர்னர் கிரண்பேடியும் 'பவர் பாலிடிக்ஸ்' நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், ஜனநாயகம் வென்றுள்ள என்றும் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துகொள்வதாகவும் கூறினார். அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தவுடன் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். மேலும் சட்ட சபை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement