Advertisement

லாரி மீது மோதிய கார் ; 3பேர் பலி

விருதுநகர் மாவட்டம், பாளையம்பட்டியில் இருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தனர். துரைசாமிபுரம் அருகே வந்தபோது நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ராஜம்மாள், சரோஜா, ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த செல்வலட்சுமி, ராஜ்குமார் மற்றும் கார் டிரைவர் சுகன் ஆகியோர், எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement