நடிப்பு, நடனம் மட்டுமின்றி நன்றாக பாடவும் கூடியவர் விஜய். ஏற்கனவே தன்னுடைய ஆரம்பகால படங்களில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். சமீபத்திய சில ஆண்டுகளில் "கூகுள் கூகுள்..., கண்டாங்கி கண்டாங்கி..., பாப்பா பாப்பா..., செல்பி புள்ள..." போன்ற சில பாடல்களை பாடியிருக்கிறார்.
தற்போது அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்தப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், 'வெறித்தனம்' என்றொரு பாடலை, விஜய் பாடியிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்கள்.
"ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பிகில் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியிருக்கிறார். விஜய்க்கு நன்றி. உண்மையிலேயே பாடல் வெறித்தனம். ரஹ்மான், அட்லீ, விவேக் ஆகியோருக்கு நன்றி" என ஏஜிஎஸ்., கல்பாத்தி அர்ச்சனா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
விஜய் இதற்கு முன் நடித்த, "உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல், சர்க்கார்" போன்ற படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தபோதிலும், இந்த பிகில் படத்திற்காகத்தான் முதன்முறையாக அவரது இசையில் விஜய் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.