உடுமலை, சிவசக்தி காலனியை சேர்ந்த சம்பத்குமார்,
மனைவி பேபிகமலத்திற்கு காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக
உறவினர் ஜோதிமணியுடன் வாடகை வேன் மூலம்,
கோவையில் உள்ள மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார்.
பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி சுங்கம் அருகே
வளைவான பகுதியில் வந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனமும்,
வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில்,
வேன் டிரைவர் வேலுச்சாமி, சம்பத்குமார், பேபிகமலம் மூவரும் உயிரிழந்தனர்.
உறவினர் ஜோதிமணியும், சரக்கு வாகன டிரைவர் ஆனந்த் ஆகியோர் காயமடைந்தனர்.
கோமங்கலம் போலீசார் விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.