Advertisement

தயாரிப்பின் போது நாட்டு வெடிகுண்டு வெடித்தது

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள உத்திரவாகினிபேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், எதிரிகளைக் கொலை செய்ய ரவி, திங்களன்று நள்ளிரவு துத்திபட்டு மைதானம் அருகே தனது நண்பர்களான சரண், ராஜூ ஆகியோருடன் சேர்ந்து வெடிகுண்டு தயாரித்தான். அப்போது வெடிகுண்டு வெடித்ததில் ரவிக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அவரது நண்பர்கள் தப்பியோடினர். சம்பவ இடத்தில் போலீஸ் சீனியர் எஸ்.பி., அபூர்வா குப்தா தலைமையில் சேதராப்பட்டு போலீசார் சோதனை செய்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement