கரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த
குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
துவக்கி வைத்தார்.
சிறிய குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை என
3 பிரிவுகளில் 10 கி.மீ., தூரம் சென்று வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
குதிரைகள் போட்டி போட்டிக் கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
முதல் நான்கு இடங்களை பிடித்த குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு
கோப்பை மற்றம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.