திருச்சி மாவட்டம் வரகனேரியில் உள்ள
சூளைக்கரை மாரியம்மன் கோயிலில்
மகா கும்பாபிஷேக விழா, நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு யாகசாலை
பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க
ராஜகோபுரம் மற்றும் மாரியம்மன், விநாயகர்,
உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு
புனிதநீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும்
தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.