ஆட்டிசம் மற்றும் மன வளர்ச்சி குன்றிய
குழந்தைகளை மண்டை ஒடு அறுவை
சிகிச்சை மூலம் சரி செய்யும் முறை
குறித்த விழிப்புணர்வு கூட்டம்,
மதுரையில் நடைபெற்றது.
ஜப்பானைச் சேர்ந்த மண்டை ஓடு
அறுவை சிகிச்சை நிபுணர் ததியோஷி
சிமோஜி, குழந்தைகள் நல சிறப்பு
டாக்டர் ராகவன் கலந்து கொண்டனர்.
டாக்டர் ராகவன் பேசுகையில்,
மண்டை ஒடு வளர்ச்சி அடையாமல்
குறுகி இருப்பதால் மூளை வளர்ச்சி
அடையாமல் ஆட்டிசம் நோயால்
குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
மண்டை ஓட்டினை சரி
செய்யும் போது மூளை வளர்ச்சி பெற்று விடுகிறது
என்றும், ஜப்பானில் இந்த முறை
பிரபலமாக உள்ளதென்றும் கூறினார்.