Advertisement

பிரதமர் வாஜ்பாய் பட்ஜெட் சூப்பர்ரு....

நத்தத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து அமைச்சர் சீனிவாசன் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசினார். ஆனால் பிரதமர் பெயரை மட்டும் வழக்கம் போல் மாற்றிச் சொல்லிவிட்டார். சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் பேசும் போது பிரதமர் மன்மோகன் சிங் என்று சொல்லி அதிர்ச்சி தந்தார். வெள்ளியன்று நத்தத்தில் நடந்த விழாவில், நம்ம பிரதமர் வாஜ்பாய், அருமையான திட்டம் தந்திருக்கார் என சொல்லி, மிரள வைத்தார். பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும், அவர் பெயரை அமைச்சர் சீனிவாசன் குழப்புவது வேடிக்கை தான்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement