ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த, போராட்டத்தில் பங்கேற்ற, பண்டாரம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் காயமடைந்தார். தற்போது குணமான நிலையில் வியாழனன்று சந்தோைஷ போலீசார் கைது செய்தனர். மாணவரை விடுவிக்க கோரி, பண்டாரம்பட்டி கிராமத்தினர், ஊர் கோயில் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.