பழநி அருகே ஆயக்குடி,
நடுத்தெருவைச் சேர்ந்த முருகானந்தத்திற்கும்,
காங்கேயத்தில் வி.ஏ.ஓ..,வாக பணிபுரியும் பரந்தாமன், என்பவருக்கும் இடையே இடபிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில்
முருகானந்தத்தின் குழந்தைகள் குமரன், சரவணன், ஆகியோர் பரந்தாமன் வீடு அருகே
தெருவில் விளையாடினர்.
முருகானந்தம் மேல் ஆத்திரத்தில் இருந்த பரந்தாமன்
மாடியில் இருந்து குழந்தைகள் மீது
ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த குழந்தைகள்
பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.