பொங்கல் திருநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில்
தங்கம்மாள்புரம், சேர்வைகாரன்மடம்,
சக்கம்மாள்புரம், சிவத்தையாபுரம் உள்ளிட்ட
பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கரில்
மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவும்,
கடும்குளிரால் மஞ்சள் குழையின் இலைகள் கருகி,
மஞ்சள் கிழங்குகள் அழுக தொடங்கியுள்ளது.
மேலும், நரையான் பூச்சி தாக்குதலால்
இலைகளில் ஓட்டை விழுகிறது.
இதனால், இந்த ஆண்டு, மஞ்சள் விவசாயம்
செய்த விவசாயிகள்
பலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக,
வேதனை தெரிவித்துள்ளனர்.