கும்பகோணம் அருகே,
ராகு பரிகார ஸ்தலமாக விளங்கும்
திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில்
கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா,
நவம்பர் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நாகநாத ஸ்வாமி
வெள்ளி ஐந்து தலை நாக வாகனம்,
வெள்ளி ரிஷப வாகனம்,
கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில்
நாள்தோறும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்
சனியன்று நடைபெற்றது.
நாக நாத ஸ்வாமி அம்பாள் மற்றும்
பஞ்சமூர்த்திகளுடன் திருத்தேரில்
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை
பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.