Advertisement

நாமக்கல் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

Share

நாமக்கல்: நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில், புக்கராண்டி, சப்தகன்னிமார், அங்காள பரமேஸ்வரி, மலையம்மன், பெரியசாமி கோவில்கள் உள்ளன. இங்கு, கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.

பணிகள் முடிந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, ப.வேலூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால யாக வேள்வி, சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டன. நேற்று (நவம்., 11ல்) அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வி, காலை, 6:00 மணிக்கு, புக்கராண்டி, சப்தகன்னிமார், அங்காள பரமேஸ்வரி, மலையம்மன், புவலிங்கம், பெரியசாமி ஆகிய சுவாமிகளுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Share

Advertisement
 
Advertisement